
Event details
- Sunday | December 2, 2007
- 3:30 am - 11:59 pm
- Folsom High School Theater, 1655 Iron Point Roadm, Folsom, CA
சாக்ரமண்டோ தமிழ் மன்றத்தின் மகிழ்வான வணக்கங்கள்
புவி அசைந்தாடும் இசை, இசையாத உள்ளங்களையும் அசைத்து விடும் வல்லமை கொண்டது. கடுங்கோடையிலும் கொடும் மழையிலும் கடுங்குளிரிலும் சுற்றுப்புறத்தை மறக்க வைத்து இசையார்வலர்களை தன்னுள்ளே இழுத்துக்கொள்ளும் ஆற்றல் கொண்டது.
திசம்பர் மாதக் குளிரில், கதகதப்பான உள்ளரங்கில் ஃபால்ஸம் உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் மனதுக்கினிய ஸ்நேகங்களோடு இனிமையான இசையை சூடான உணவோடு ரசிப்பது எண்ணும்போதெல்லாம் இன்பமுறச் செய்கின்ற இனிய நிகழ்வு.
அந்த நிகழ்வை சாத்தியமாக்க, சாக்ரமண்டோ தமிழ்மன்றம், குடாப்பகுதியிலிருந்து தில்லானா இசைக்குழுவைக் கொண்டு வந்து உல்லாச மாலையை, இன்னிசை மாலையாக உங்களுக்கு அணிவிப்பதில் உவகை கொள்கிறது.
நுழைவுச்சீட்டுகளை கீழ்க்கண்ட அன்பர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். (முன்பதிவு – $10.00 அரங்க வாயிலில்- $11.00) எட்டுவயது மற்றும் அதற்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். உணவுகளை, அரங்கில் உணவு விற்பனையாளர்களிடமிருந்து நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.
ரூபன்: | 608-0753 |
ஸ்ரீதர்: | 220-5284 |
மூர்த்தி: | 612-2244 |
சுந்தர்: | 730-6720 |
சங்கீதா: | 797-8498 |
சந்தானம்: | 207-8677 |
முருகேஷ்: | 660-9300 |
சுபோ: | 983-9763 |
பகவதி: | 487-1425 |
அர்ஜுன்: | 684-7376 |
இன்னிசை மாலையில் இன்பம் எய்த வாருங்கள்
திசம்பர் இரண்டு மாலை 3:30