Event details
- Saturday | August 18, 2007
- 10:00 am - 11:59 pm
சாக்ரமண்டோ தமிழ் மன்றத்தின் அன்பான வணக்கங்கள் !!!!
எதிர்வரும் ஆகஸ்ட் 18 ஆம் நாள் சாக்ரண்டோ தமிழ் மன்றத்தின் சார்பில் தமிழ் நண்பர்களுக்காக ஒரு பிக்னிக் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதிக்கு புதிதாக வந்துள்ளவர்கள் இங்கேயே இருப்பவர்களைப் பற்றி அறிந்து கொள்ளவும், சாக்ரமண்டோவின் பல பகுதிகளில் இருப்பவர்கள் ஒரே இடத்தில் கூடி மற்ற பகுதியில் இருப்பவர்களைப் பற்றி அறிந்து கொள்ள ஏதுவாகவும் இம் மனமகிழ் நிகழ்ச்சி மன்றத்தாரால் வருடந்தோறும் நடாத்தப்படுகிறது.
நண்பர்கள் தங்கள் குடுமப்த்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்களுடன் இந் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார்கள் என நம்புகிறோம்.
இந் நிகழ்ச்சி நடைபெறும் பூங்கா.
Stone Creek Community Park
Spoto Dr, Rancho cordova, CA 95826 US
இது ஒரு கூட்டாஞ்சோறு வகையான சந்திப்பு (Potluck Picnic) என்பதால் கலந்து கொள்ளும் நண்பர்கள் என்ன வகையான உணவுகளை கொண்டு வரலாம் என்பதையும்
கணி அழைப்பு ( evite) மூலமாக பகிர்ந்து கொள்கிறோம். என்னென்ன உணவு வகைகள் கொண்டுவரலாம் என்பதற்கான முழு பட்டியல் இதோ. இதில் ஒன்றை
தேர்ந்தெடுத்துவிட்டு எங்களுக்கு உங்கள் தெரிவை மின்மடல் மூலம் தெரியப்படுத்துங்கள்
நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பெரியவர்கள், மற்றும் குழந்தைகளுக்காக வித விதமான பொழுது போக்கு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ப்படவுள்ளன. கலந்து கொள்ளவும்
நடத்தவும் விருப்பம உள்ளோர் திரு சந்தானம் அவர்களை தொடர்புகொள்ளவும் ((916)-985-3615)