Event details
- Saturday | December 6, 2008
- 3:00 am - 11:59 pm
- Sac State(CSUS) University Grand ball room
சாக்ரமண்டோ தமிழ் மன்றம் அன்புடன் அழைக்கிறது
”கண்கள் இரண்டால்” இசைமழை இரவு – திசம்பர் ஆறாம் தேதி 2008 – மதியம் 3:00
இசைக்கு மயங்காதவரே இலர்.
மனதுக்கு பிடித்த இசையை கேட்டு மெய்மறப்பது யோகத்தில் எல்லாம் உயர்ந்த யோகம். முரடனை மென்மையாக்கியும், தந்திரனை சாதாரணணாக்கியும், எந்திரனை மனிதனாக்கியும், வயோதிகத்தை மறக்கச்செய்வதுமான இன்னபிற மாயங்கள் புரியும் மந்திரம். இதற்கு கலாசார இசை என்றோ, கிராமிய இசை என்றோ, இந்துஸ்தானி இசை என்றோ, கூத்திசை என்றோ, மெல்லிசை என்றோ, திரைஇசை என்றோ எந்த பாகுபாடுகளும் கிடையாது.
அவரவர்க்கு அதது – அவரவர் பூத்தது போல். !!!
திசம்பர் திங்கள் ஆறாம் திகதி கதகதப்பான உள்ளரங்கில் CSUS Grand Ballroom, Sac State Universityயில் சஹ்ருதயர்களோடு இனிமையான திரை இசையை சூடான உணவோடு ரசிப்பது எண்ணும்போதெல்லாம் இன்பமுறச் செய்கின்ற இனிய நிகழ்வு.
அந்த நிகழ்வை சாத்தியமாக்க, சாக்ரமண்டோ தமிழ்மன்றம்குடாப்பகுதியிலிருந்து ராகாலயா இசைக்குழாமை அழைத்து வந்து உங்களை மகிழ்விப்பதில் பெரும் உவகை கொள்கிறது. கடந்த பல வருடங்களாக குடாப்பகுதியில் வெற்றிக்கொடி கட்டும் இக்குழு பாடல்கள் மற்றும் ஆடல்களை கலந்து நேயர்களை மகிழ்விப்பதில் தொடர்ந்து சாதனை புரிந்து வரும் துடிப்பான இசைக்குழு.
நுழைவுச்சீட்டுகளை கீழ்க்கண்ட அன்பர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம். (முன்பதிவு – $10.00 அரங்க வாயிலில்- $12.00) பத்து வயது மற்றும் அதற்குக் கீழுள்ள குழந்தைகளுக்கு அனுமதி இலவசம். உணவுகளை, அரங்கில் உணவு விற்பனையாளர்களிடமிருந்து நேரடியாக பெற்றுக் கொள்ளலாம்.
அனுமதிச்சீட்டுடன் உணவு இலவசம்
அனுப்ரியா (705-3141) – குணா (408-507-1073) சரவணன்(230-1334)
சுந்தர்(730-6720 ) -சங்கீதா (797-8498)- ரூபன்(608-0753)
சுபோ(983-9763)-பகவதி(487-1425)மூர்த்தி(612-2244)
முருகேஷ்(660-9300)- அர்ஜுன்(684-7376)
கண்கள் இரண்டால் நிகழ்ச்சியை கண்ணுற்று காதுகளில் தேன் மழை பொழிந்து கொள்ள வாருங்கள்
திசம்பர் ஆறு மாலை 3:00