logo சாக்ரமெண்டொ தமிழ் மன்றம்            உங்களை இருகரம் கூப்பி வரவேற்கிறது

 

 

எதிர்வரும் மே திங்கள் 3 ஆம் நாள் மாலை நான்கு மணி அளவில் சாக்ரமண்டோ தமிழ்மன்றத்தின் சார்பில்   தமிழ்ப் புத்தாண்டு விழா சான் யுவான் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது

நண்பர்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு இந்த விழாவை இனிதே நடத்தித் தருமாறு அன்புடன் அழைக்கிறோம்.

தமிழர்கள் மொழியை தங்களின் தாயினை விட அதிகமாக நேசிப்பவர்கள்.  அயல்நாட்டில் வசித்தாலும் தங்கள் குழந்தைகளுக்கும் தமிழன்னையின் அருள் கிடைக்குமாறு அனுதினமும் தமிழ் புகட்டி வளர்ப்பவர்கள்.  தங்கள் குழந்தைகளின் 

தமிழ்  ஆர்வத்தையும் முனைப்பையும் வெளிப்படுத்தக்கூடிய எந்த வாய்ப்பையும் அவர்கள் தவறவிடுவதைல்லை என்பதை வருடா வருடம் அதிகரித்து வரும் அவர்கள் பங்களிப்பே சான்றளிக்கிறது.

வாருங்கள்.  ஒரு குடும்பமாக வந்திருந்து கூடிக் களித்து மீண்டு செல்லுங்கள்

பரதமும் நடனமும் நாடகமும் நாட்டிய நாடகமும் பாடலும் தமிழககலைகளும் திரையிசை கோப்புகளும் தம்ழ்ச்சான்றோர் கதைகளுமாக கிள்ளை மொழி மழலையர், முல்லையை நிகர்த்த  மங்கையரும் இரும்பனைய ஆடவரும்   ஆனந்தமாய் அணிதிரண்டு சித்திரையை கைகோர்த்து வரவேற்கும் முத்திரை பதிக்கும் நன்னாள்.

ஆதவனின் கருணைக்கும் அன்னைமொழியின் செழுமைக்கும் நன்றி செலுத்தும் பொன்னாள்.

விழாவை வெற்றிகரமாக நடத்தும் ஏற்பாடுகளில் தமிழ்மன்றம் முனைந்து இருக்கிறது.  ஏற்பாடுகளில் எங்களோடு தோள் கொடுக்க நமது மக்களுக்காக நாம் சேவை செய்ய ஏராளமான உதவி (Volunteers for help) தேவைப்படுகிறது.  எங்களுக்கு உதவ விரும்பும் நண்பர்கள் மடல் அனுப்பவும்.

மேல் விவரங்களுக்கு இந்த இணைப்பில் எலிக்குட்டியை க்ளிக்கவும்